Saturday, 5 November 2011

Idhayakani


தென்னகமாம் இன்பத்திரு நாட்டில்





பாடல் தலைப்பு தென்னகமாம் இன்பத்திரு நாட்டில்    திரைப்படம் இதயக்கனி 
கதாநாயகன் எம்.ஜி,ஆர்  கதாநாயகி ராதா சலூஜா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன், சீர்காழி.எஸ்.கோவிந்தராஜன்  பாடகிகள் S.ஜானகி 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர்   ராகம்  
வெளியானஆண்டு 1975  தயாரிப்பு சத்யா மூவிஸ் 
                                                              தொகையறா

ஆண்-1  : தென்னகமாம் இன்பத்திரு நாட்டில் மேவியதோர்
              கன்னடத்துக் குடகுமலைக் கனி வயிற்றில் கருவாகி
              தலைக்காவிரி என்னும் தாதியிடம் உருவாகி
              ஏர் வீழ்ச்சி காணாமல் இருக்க சிவ சமுத்திர
              நீர் வீழ்ச்சி எனும் பேரில் நீண்ட வரலாறாய்
பெண்  :    வண்ணம் பாடி ஒரு வளர்தென்றல் தாலாட்ட
              கண்ணம்பாடி அணை கடந்து ஆடு தாண்டும் காவிரிப் பேர் பெற்று
              அகண்ட காவிரியாய்ப் பின் அடர்ந்து
ஆண்-1  : கல்லணையில் கொள்ளிடத்தில்
              காணும் இடமெல்லாம் தாவிப் பெருகி வந்து
              தஞ்சை வளநாட்டைத் தாயாகிக் காப்பவளாம்
              தனிக் கருணைக் காவிரி போல்
பெண்  :    செல்லும்  இடமெல்லாம் சீர் பெருக்கிப் பேர் நிறுத்தி
              கல்லும் கனியாகும் கருணையால் எல்லோர்க்கும்
ஆண்-1  :  பிள்ளை என நாளும் பேச வந்த கண்மணியே
               வள்ளலே எங்கள் வாழ்வே இதயக்கனி
இரு  :      எங்கள் இதயக்கனி இதயக்கனி

                              (இசை)        பல்லவி

பெண்  :     நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
                நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
பெண்குழு :நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
                நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற       
ஆண்-1  :   என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
                நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே   
குழு  :       என்றும் நல்லவங்க எல்லாரும் ஒங்க பின்னாலே நீங்க
               நெனச்சதெல்லாம் நடக்குமுங்க கண்ணு முன்னாலே
               நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
               நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

                           (இசை)           சரணம் - 1

ஆண்-2  :  உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
               உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
               உழைக்கும் தோழர்களே ஒன்று கூடுங்கள்
               உலகம் நமது என்று சிந்து பாடுங்கள்
               மேடு பள்ளம் இல்லாத சமுதாயம் காண
               என்ன வழி என்று எண்ணிப் பாருங்கள் அண்ணா
               சொன்ன வழி கண்டு நன்மைத் தேடுங்கள்   
               அண்ணா சொன்ன வழி கண்டு நன்மைத் தேடுங்கள்

ஆண்-2  :  நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
               நாடெங்கும் இல்லாமை இல்லை என்றாக   

                          (இசை)           சரணம் - 2
           
பெண்  :    பாடுபட்டுச் சேர்த்தப் பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
              வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம் நாம்
              பாடுபட்டுச் சேர்த்தப் பொருளைக் கொடுக்கும் போதும் இன்பம்
              வாடும் ஏழை மலர்ந்த முகத்தைப் பார்க்கும் போதும் இன்பம்
ஆண்-1  : பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
              சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை 
              பேராசையாலே வந்த துன்பம் சுயநலத்தின் பிள்ளை
              சுயநலமே இருக்கும் நெஞ்சில் அமைதி என்றும் இல்லை
              அமைதி என்றும் இல்லை

குழு     :   நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
             நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற 

                       (இசை)                             சரணம் - 3

ஆண்-2 : காற்றும் நீரும் வானும் நெருப்பும்
             பொதுவில் இருக்குது மனிதன்
             காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
             காற்றும் நீரும் வானும் நெருப்பும்
             பொதுவில் இருக்குது மனிதன்
             காலில் பட்ட பூமி மட்டும் பிரிந்து கெடக்குது
ஆண்-1 : பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே
             பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே   உலகில்
             பிரிவு மாறி ஒருமை வந்தால் அமைதி நிலவுமே அமைதி நிலவுமே

குழு     :   நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
             நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற

        (இசை)                             சரணம் - 4
   
ஆண்  :   நதியைப் போல நாமும் நடந்து பயன் தரவேண்டும்
             கடலைப் போல விரிந்த இதயம் இருந்திடவேண்டும்
ஆண்-1 : வானம் போலப் பிறருக்காக அழுதிடவேண்டும்
             வாழும் வாழ்க்கை உலகில் என்றும்
             விளங்கிட வேண்டும் விளங்கிட வேண்டும்

குழு     :   நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
              நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற
              நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற இந்த
              நாட்டில் உள்ள ஏழைகளின் வாழ்வு முன்னேற (இசை)   
Courtesy_
http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?id=521



இன்பமே உந்தன் பேர் பெண்மையோ





பாடல் தலைப்பு இன்பமே உந்தன் பேர் பெண்மையோ    திரைப்படம் இதயக்கனி 
கதாநாயகன் எம்.ஜி,ஆர்  கதாநாயகி ராதா சலூஜா 
பாடகர்கள் டி.எம்.சௌந்தரராஜன்  பாடகிகள் பி.சுசீலா 
இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன்   பாடலாசிரியர்கள் புலமை பித்தன்  
இயக்குநர் ஏ.ஜெகன்நாதன்   ராகம்  
வெளியானஆண்டு 1975  தயாரிப்பு சத்யா மூவிஸ் 
                                 ஆரம்ப இசை                   பல்லவி

ஆண்  :    இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
              இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
              என் இதயக்கனி நீ
              சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
              என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
பெண்  :    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
              இன்பமே உந்தன் பேர் வள்ளலோ
              உன் இதயக்கனி நான்
              சொல்லும் சொல்லில் மழலைக்களி
              உன் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
              இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

                                         (இசை)              சரணம் - 1   
       
பெண்  :    சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
              சர்க்கரைப் பந்தல் நான் தேன் மழை சிந்தவா
              சந்தன மேடையும் இங்கே சாகச நாடகம் எங்கே
ஆண்  :     தேனொடு பால் தரும் செவ்விள நீர்களை
              ஒரிரு வாழைகள் தாங்கும்
              தேவதை போல் எழில் மேவிட நீ வர
              நாளும் என் மனம் ஏங்கும்

ஆண்  :    இன்பமே...உந்தன் பேர் பெண்மையோ

                                         (இசை)                 சரணம் - 2
   
ஆண்  :    பஞ்சனை வேண்டுமோ நெஞ்சனை போதுமே
    பஞ்சனை வேண்டுமோ நெஞ்சனை போதுமே   
    கைவிரல் ஓவியம் காண காலையில் பூமுகம் நாண
பெண்  :    பொன்னொளி சிந்திடும் மெல்லிய தீபத்தில் போரிடும்
    மேனிகள் துள்ள புன்னகையோடொரு கண்தரும்
    ஜாடையில் பேசும் மந்திரம் என்ன

பெண்  :    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

                                       (இசை)                     சரணம் - 3

பெண்  :    மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
               மல்லிகைத் தோட்டமோ வெண்பனிக் கூட்டமோ
ஆண்  :    மாமலைமேல் விளையாடும் மார்பினில் பூந்துகில் ஆடும்
பெண்  :    மங்கல வாத்தியம் பொங்கிடும் ஓசையில்
               மேகமும் வாழ்த்திசை பாடும்
ஆண்  :     மாளிகை வாசலில் ஆடிய தோரணம் வானவீதியில் ஆடும்

ஆண்  :     இன்பமே உந்தன் பேர் பெண்மையோ
               என் இதயக்கனி நீ
               சொல்லும் சொல்லில் மழலைக்கிளி
               என் நெஞ்சில் ஆடும் பருவக்கொடி
பெண்  :    இன்பமே உந்தன் பேர் வள்ளலோ

Courtesy_
http://lyrics.lakshmansruthi.com/song_detail_list.php?id=522

No comments:

Post a Comment